குழந்தை பிறந்த பின் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கும் உணவுகள்!!!

Thagavalthalam Pasumai Nayagan Pasumai4U


            குழந்தை பிறந்த பின்னர் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதோடு, சில பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அதில் ஒருசிலப் பிரச்சனைகளைப் பற்றி பல பெண்களுக்கு தெரியாது. ஏனெனில் அதனை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. அது தான் மலச்சிக்கல். ஆம், மலச்சிக்கல் பிரச்சனை, பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாகும். பொதுவாக பிரசவத்திற்கு பின் பெண்களின் செரிமான மண்டலமானது மெதுவாக இயங்கும். இந்நேரத்தில் அவர்களால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்க முடியாது. அவ்வாறு கொடுத்தால், கடுமையான வலியானது ஏற்படும். 

அதிலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, இத்தகைய பிரச்சனை உடலில் இருந்தால், உடனே அதனை சரிசெய்ய முயல வேண்டும். இல்லாவிட்டால், அது குழந்தையின் உடலில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதற்கு முதலில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பின்பற்ற வேண்டியது சரியான டயட் தான். 

முறையான டயட்டை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மேற்கொள்ளாவிட்டால், அது உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமாக மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே பெண்கள் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் செரிமானமானது சீராக செயல்பட்டு, கழிகளானது எளிதில் வெளியேற்றப்படும். இப்போது பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கும் உணவுகள் எவையென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து உணவில் சேர்த்த மலச்சிக்கலில் இருந்து விடுபடுங்கள்.

டில் கீரை (Dill Leaves)..

சூப் மற்றும் குழம்பில் சேர்க்கப்படும் டில் கீரையை பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட்டால், அது தாய்ப்பாலை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும்.பசலைக் கீரை..

பசலைக் கீரையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த பசலைக் கீரையில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்களால், உடலில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் குணப்படுத்தலாம். அதிலும் பிரசவத்திற்கு பின் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால், நல்ல தீர்வு கிடைக்கும்.


சீரகம்.. 

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு ஒரு சிறந்த இயற்கை நிவாரணி என்றால், 2 டீஸ்பூன் சீரகத்தை நெய்யில் போட்டு வறுத்து, பொடி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம்.நெல்லிக்காய்

ஜூஸ் தினமும் அரை டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால், குடலியக்கமானது நன்கு செயல்பட்டு, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையானது நிச்சயம் குணமாகிவிடும்.


நவதானியங்கள் 

நவதானியங்களால் ஆன உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்புக்கள் அதிகமாவதை தவிர்ப்பதோடு, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனையையும் தவிர்க்கலாம்.உலர் பழங்கள் 

மற்றும் நட்ஸ் ஸ்நாக்ஸ்களில் உலர் திராட்சைகள், பேரிச்சம் பழம், உலர் ஆப்பிள் போன்றவற்றை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

தண்ணீர் 

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதால் அடிக்கடி தாகம் எடுக்கும். எனவே தினமும் குறைந்தது 3-4 டம்ளர் தண்ணீர் குடிப்பதுடன், 2 டம்ளர் இளநீர் குடித்தால், உடல் வறட்சி தடைபடுவதோடு, குடலியக்கமும் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.


வேக வைத்த ஓட்ஸ் 

ஓட்ஸில் நார்ச்சத்தானது அதிகமான அளவில் உள்ளது. எனவே அதனை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், அவை மென்மையாகி, எளிதில் செரிமானமடைந்துவிடும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும்.


தயிர் 

தயிரை அதிகம் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாவதோடு, சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளையும் குணமாக்கும். அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தயிரை சாப்பிடும் போது, மிகவும் குளிர்ச்சியாக சாப்பிடாமல், அறை வெப்பநிலையில் வைத்து சாப்பிட வேண்டும்பழங்கள் 

வாழைப்பழம் மற்றும் பெர்ரிப் பழங்களில் இருக்கும் நார்ச்சத்து, வேறு எதிலும் அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதிலும் இத்தகைய பழங்களை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

டீ குடித்தால் பக்கவாத நோயில் இருந்து காத்துக் கொள்ளலாம்: ஆய்வில் தகவல்


பசுமை நாயகன் Pasumai Nayagan   thagavalthalam

ஒரு நாளைக்கு மூன்று கப் டீ குடித்தால் பக்கவாத நோய் ஏற்படுவதில் இருந்த் 20 சதவீதம் நம்மை காத்துக்கொள்ள முடியும் என சமீபத்திய ஆய்வு தெரிவிகிறது.


பிரட்டனில் முன்பு நடத்தப்பட்ட ஆய்வின் போது டீ குடிப்பதன் மூலம் மூளையில் ஏற்படும் கட்டியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படிருந்தது. இக்கருத்தையும் இந்த சமீபத்திய ஆய்வு ஏற்றுக்கொள்கிறது.

கெயில் திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!!!

பசுமை நாயகன் Pasumai Nayagan www.thagavalthalam.com

தமிழக அரசு தடை விதித்த, குழாய்கள் மூலம் தமிழகம் வழியாக மங்களூருக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.பசுமை நாயகன் Pasumai Nayagan www.thagavalthalam.com

        கொச்சியிலிருந்து தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக மங்களூருக்கு குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசின் கெயில் (கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்) நிறுவனம் செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

        விளைநிலங்கள் வழியாக எரிவாயுவைக் கொண்டு செல்லும் திட்டத்திற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விவசாய நிலத்தின் செழுமை பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்திருந்தனர். பல்வேறு கட்ட போராட்டங்களையும் 7 மாவட்ட விவசாயிகள் நடத்தினர்.

      விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற, தமிழக அரசு, குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லும் கெயிலின் திட்டத்துக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. மேலும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழாய்களை அகற்றவும் தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து கெயில் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. குழாய்களை அகற்ற, இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழகம் வழியாக எரிவாயுக் குழாய் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசின் கெயில் (கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்) நிறுவனம் தொடர அனுமதி அளித்துள்ளது.

"நல்ல சோறு" சிறு தானிய உணவுகள் நூல் வெளியீட்டு விழா
            நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களை கைவிட்டு அரிசி சோற்றின் மீது நம் சமூகம் தன கவனத்தை திருப்பியது, இந்தியாவில் 57 லட்சம் குழந்தைகள் போஷாக்கின்மை காரணமாக, சராசரி எடையை விட குறைவான எடையுடன் பிறப்பதாகவும், நம் நாட்டில் மொத்த உணவு உற்பத்தியைப் பற்றி அதிகமாகப் பேசப்படும் வேளையில், கடந்த 1991-ம் ஆண்டு தாராளமாயப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின்னால், இந்தியாவில் தனி நபருக்குக் கிடைத்து வந்த உணவு,அதற்கு முன் இருந்ததை விட 2001-ம் ஆண்டில் 150 கிலோவாகக் குறைந்துவிட்டது என்றும் இப்படி உணவு உற்பத்தி அளவும் பெருமளவு குறைந்துவிட்டதற்கு, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை வேறு பயன்பாடுகளுக்குக் கொடுத்துவிட்டு வெளியேறி வருவது ஒரு காரணம்.

1965க்கு முன் அன்றாட வாழ்வில் கம்மங்கூழும், கேப்பைக் கழியும் நீக்கமற நிறைந்திருந்தன, காலையில் வடிகஞ்சி, பின்னர் வயல் வேலை அப்புறம் கம்மங்கூழ் என்று ஓடியது தினசரி வாழ்வு.

பின்னர் தட்டில் அரிசி என்பது ஒரு கௌரவம் என்ற கருத்துருவாக்கம் நிகழ்ந்தது. இப்படியாக ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சிறுதானிய உணவிற்கு தமிழன் கொஞ்சம் கொஞ்சமாக மறுப்பு சொன்னான் .
இது வாய்வு, மலச்சிக்கல், இரத்த அழுத்தம் சர்க்கரை என, பல வியாதிகளை உருவாக்கியது.

நாம் சிறு தானியங்களை நோக்கி நம் கவனத்தை திருப்பினால் அதற்கான சந்தை ஒன்று தானே உருவாகும். சிறுதானியங்கள் தண்ணீர் அதிகம் கேட்டகாத மானாவாரி பயிர்கள் என்பது ஒரு கூடுதல் பலம். நமது பாரம்பரிய சிறு தானியங்களின் ஒரு கிலோ உற்பத்திக்கு சொற்ப தண்ணீர் போதுமானது.

அன்னம் எப்படியோ எண்ணம் அப்படியே,உணவின் தூய்மை உணர்ந்து வாழ்வை எளிமையாக்கும் உன்னத பாதை சிறு தானிய உணவு முறைகளில் பொதிந்துள்ளது

- கோ.நம்மாழ்வார்
"நல்ல சோறு " ரா.ராஜமுருகன் எழுதிய சிறு தானிய உணவுகள் நூல் வெளியீட்டு விழா
நவம்பர் 23, கயித்த மலை குக்கூ நூலகம்
தொடர்புக்கு - 9842672439,9942118080.

                                         -பசுமை நாயகன்

மாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்பசுமை நாயகன் thagavalthalam

                       மரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்... வெறுமை என்ற ஒற்றைச்சொல்தான் எழும்பும். மரங்கள் இல்லாவிட்டால் சுத்தமான காற்று கிடையாது.. வீடுகள் முழுமையடையாது... காகிதங்கள் கிடையாத நாற்காலிகள் கிடையாது மரச்சாமான்கள் இல்லை.

     நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரங்கள் நம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருக்கின்றன.. ஆனால் அவற்றை நாம் பொருட்டாக மதிப்பதில்லை.. ஒரு மரம் மரித்தால்.. பின்னொரு மரம் அதே அளவில் செழித்து வளர எத்தனை ஆண்டுகாலம் பிடிக்கும்? அதுவரை அந்த மரம் இயற்கைக்கு அளித்த பங்களிப்பை யார் ஈடு செய்வது?

Pasumai Nayagan thagavalthalam

      தொழிற்சாலைகளுக்காகவும்.. வீடுகளுக்காகவும் வெட்டப்படும் மரங்கள் ஈடு செய்யப்படுவதில்லை.. மண் சுவாசிக்க மரம் வேண்டும்.. பூமி குளிர மண் வேண்டும்.. மாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்... மழை கிடைக்கவும் மரம்தான் வேண்டும்..


Pasumai Nayagan thagavalthalam
     
 ஒரு செடி வளர்த்து பாருங்கள்.. முளைவிடும் நேரம் தொடங்கி முதல் தளிர் துளிர்க்கும் வரை ஒவ்வொரு தருணமும் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியை அளவிடவே முடியாது.. நாம் நட்ட செடியில் பூக்கும் முதல் பூ தரும் நெகிழ்ச்சி பிரசவித்த குழந்தையின் முகம் பார்க்கும் மகிழ்ச்சிக்கு ஈடாக சொல்லலாமா? அந்த மகிழ்ச்சியை இனியாவது கொண்டாடுவோம்.. அனுபவிப்போம்..

                                                                                             -பசுமை நாயகன்

அரவணைப்பதையே வாழ்வாய் கொண்டுள்ளவர் கலாராணி.

 
ரவணைப்பில் அன்னைக்கு நிகர் யாரும் இல்லைதான்.ஆனால், தனது வாழ்க்கையைத் தியாகம் செய்து பிறருக்கு அன்னையாகும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கணவன், குழந்தை, குடும்பம் என்று வாழ்வதையே பெரும்பாலான மகளிர் வாழ்வின் இலக்காய் எண்ணும் உலகில், யார் பெற்ற குழந்தைகளையோ, யார் யாரின் பெற்றோர்களையோ தமது சொந்தமாக பாவித்து அரவணைப்பதையே வாழ்வாய் கொண்டுள்ளவர் கலாராணி.
காசேதான் கடவுள் என்று நம்பும் உலகில் ஆதரவற்று தனித்து விடப்பட்ட குழந்தைகள், முதியவர்கள் என அனைவரின் மனதிலும் எதிர்காலம் என்ற ஒன்று அவர்களுக்கு உண்டு என்று அவர்களை நம்ப வைத்தவர் இந்த கலாராணி.
செல்லும் திசைதெரியாமல் இருந்த இவர்களின் முகத்திலும், மனதிலும் ஆனந்தத்தையும், நிம்மதியையும் ஒருங்கே அளிக்க கலாராணி விதைத்த விதைதான் 'விதை' என்ற சேவை அமைப்பு.
தனி மனிதராய் பிறருக்கு உதவுவதே பெரும் சுமையாய்க் கருதிடும் இக்காலகட்டத்தில் பலரையும் பராமரிக்க இவர் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
கலாராணி போன்றோர்க்கு வாழ்க்கையில் பெரிதாய் எந்த எதிர்பார்ப்பும் இருப்பதில்லை…ஆதரவற்றவர்களுக்கு வாழ்வு தருவதைத் தவிர. ஆரவாரமற்ற சேவையால் சமுதாயம் என்ற சிலையை செதுக்கும் கலாராணி ஒரு சமுதாயச் சிற்பியே.

ஒரு கிரேட் சலியூ ட் சார்

கருப்பையா

      திருப்பூர் போக்குவரத்து காவல்துறையில் உதவி ஆய்வாளர் ராக பணி புரிகிறார் .ஒரு காவலர் எப்படி பணி புரிய வேண்டும் என்பதில் உதாரணமானவர் .கடுமையான முகம் காட்டி கொண்டு இருக்கும் காவலர்கள் மத்தியில் அன்பாய் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் போக்குவரத்து ஒழுங்கு பணியை செய்வார். எனக்கு தெரிந்து இவர் இருந்தால் இவர் அன்புக்கு கட்டு பட்டு வெள்ளை கோட்டிற்கு அப்பால் நிற்பவர்கள் கூட வெள்ளை கோட்டிற்குள் வாகனத்தை நிறுத்துவார்கள் 

அன்பாய் அனைவரையும் கண்டிப்பார் . கையூ ட்டு வாங்காத அன்பான போலிஸ் காரர் உண்மையை சொல்ல வேண்டுமானால் ஒரு உண்மையான
மனிதர் இவர் .

இவரை போல் தமிழக காவல்துறையில் காவலர்கள் இருந்தால் காவல் துறையே கவுரவம் நிறைந்ததாக மாறிவிடும்.
 கருப்பையா சார் உங்களுக்கு பசுமை நாயகன் சார்பாக 
ஒரு கிரேட் சலியூட் சார்
 
                                     -பசுமை நாயகன்