மாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்



பசுமை நாயகன் thagavalthalam

                       மரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்... வெறுமை என்ற ஒற்றைச்சொல்தான் எழும்பும். மரங்கள் இல்லாவிட்டால் சுத்தமான காற்று கிடையாது.. வீடுகள் முழுமையடையாது... காகிதங்கள் கிடையாத நாற்காலிகள் கிடையாது மரச்சாமான்கள் இல்லை.

     நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரங்கள் நம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருக்கின்றன.. ஆனால் அவற்றை நாம் பொருட்டாக மதிப்பதில்லை.. ஒரு மரம் மரித்தால்.. பின்னொரு மரம் அதே அளவில் செழித்து வளர எத்தனை ஆண்டுகாலம் பிடிக்கும்? அதுவரை அந்த மரம் இயற்கைக்கு அளித்த பங்களிப்பை யார் ஈடு செய்வது?

Pasumai Nayagan thagavalthalam

      தொழிற்சாலைகளுக்காகவும்.. வீடுகளுக்காகவும் வெட்டப்படும் மரங்கள் ஈடு செய்யப்படுவதில்லை.. மண் சுவாசிக்க மரம் வேண்டும்.. பூமி குளிர மண் வேண்டும்.. மாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்... மழை கிடைக்கவும் மரம்தான் வேண்டும்..


Pasumai Nayagan thagavalthalam
     
 ஒரு செடி வளர்த்து பாருங்கள்.. முளைவிடும் நேரம் தொடங்கி முதல் தளிர் துளிர்க்கும் வரை ஒவ்வொரு தருணமும் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியை அளவிடவே முடியாது.. நாம் நட்ட செடியில் பூக்கும் முதல் பூ தரும் நெகிழ்ச்சி பிரசவித்த குழந்தையின் முகம் பார்க்கும் மகிழ்ச்சிக்கு ஈடாக சொல்லலாமா? அந்த மகிழ்ச்சியை இனியாவது கொண்டாடுவோம்.. அனுபவிப்போம்..

                                                                                             -பசுமை நாயகன்