திருப்பூரில் அதிமுக கவுன்சிலர் முத்து மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நேற்றிரவு கவுன்சிலர் அவரது குடும்பத்தினரை அருகிலுள்ள தோட்டத்து
வீட்டில் விட்டு விட்டு வீடு வந்துள்ளார். இன்று அதிகாலை வழக்கமாக
கவுன்சிலர் வீட்டிற்கு சென்று வருகை பதிவேட்டில் கையப்பமிட துப்புரவு
தொழிலாளர்கள் வந்துள்ளனர். அப்போது, முத்து வெட்டுப்பட்டு இறந்து
கிடப்பத்தை பார்த்து அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு
பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய
போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-இணைய செய்தியாளர் - s.குருஜி