திருப்பூர் : கடத்தப்பட்ட 10 சிறுமிகள் மீட்பு

       ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட பத்து சிறுமிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
டெல்லியில் இருந்து ஆந்திரா, கர்நாடகா வழியாக திருப்பூர் வரும் வரும் லோக்மான்யா எக்ஸ்பிரஸ் ரயிலில், சிறுமிகள் பலர் கடத்தி கொண்டுவரப்படுவதாக திருப்பூர் காவல்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, முன்கூட்டியே  ரயில் நிலையத்துக்கு சென்ற திருப்பூர் காவல்துறையினர், பத்து சிறுமிகளையும் மீட்டனர். அவர்களை கடத்தி வந்த ஒரு பெண் உள்ளிட்ட சிலரை கைது கைது செய்தனர்.
கர்நாடகா மற்றும ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள பாவகாடா என்ற கிராமத்தில் இருந்து அந்த சிறுமிகள் கடத்தி வரப்பட்டுள்ளனர். இதுகுறித்து தனியார் தொண்டு நிறுவனம் கொடுத்த தகவலினபேரில், பெங்களூர் காவல்துறையினர் கோவை காவல்துறை ஆணையருக்கு தகவல் அனுப்பினர்.
இதனையடுத்து, இந்த கடத்தல் கும்பல் பிடிப்பட்டுள்ளது. கடத்தி வரப்பட்ட சிறுமிகள், தனியார் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் காவலதுறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்