திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திலுள்ள குடிமங்கலம், பெத்தம்பட்டி உள்வட்டங்களை உடுமலைப்பேட்டை வட்டத்தில் சேர்த்தும் , மடத்துக்குளம் உள்வட்டத்திலுள்ள 8 கிராமங்களைப் பிரித்து துங்காவி என்ற உள்வட்டத்தை உருவாக்கி மடத்துக்குளம் வட்டத்தினை மக்களின் தேவைக்காக உருவாக்க மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த வட்டத்திற்கென புதியதாக வருவாய் ஆய்வாளர் 1, உள்வட்ட அளவர் 1, உதவியாளர் 1, பதிவறை எழுத்தர் 1, ஆகிய 4 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதனால் தொடர் செலவினமாக ஆண்டொன்றுக்கு 9 லட்சத்து 98 ஆயிரத்து 724 ரூபாய் அரசுக்கு ஏற்படும்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தை இரண்டாக பிரித்து உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய இரண்டு வட்டங்கள் உருவாக்கப்பட்டு, உடுமலைப்பேட்டையை தலைமையிடமாக்க கொண்டு, உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வருவாய் கோட்ட அலுவலகம் தற்பொழுது உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக இயங்கிவருகிறது. இதர கோட்ட அளவிலான அலுவலகங்களை ஆங்காங்கே பல்வேறு இடங்களில் வாடகை கட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
வருவாய் கோட்டாட்சியர்அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இரண்டும் ஒரே கட்டத்தில் இயங்குவதனால் ஏற்படும் இட நெருக்கடியினாலும், இதனால் அங்கு வரும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களையும் கருத்தில் கொண்டு, உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டத்திற்கென கோட்டாட்சியர் அலுவலகம் அமைப்பதற்காக உடுமலைப்பேட்டையில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, 1 கோடியே 85 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவில் புதியதாக வருவாய் அலுவலகம் கட்ட மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
-இணைய செய்தியாளர் - ஈஸ்வரன்