திருப்பூரில் தமிழக அரசின் பொங்கல் பரிசை வாங்க தாயுடன் ரேஷன் கடைக்கு சென்ற சிறுவன் மீது அரிசி மூட்டைகள் சரிந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் உயிரிழந்தான்.
திருப்பூர் பெருமாள்நல்லூர் பகுதியில் உள்ள எஸ்.எஸ். நகர் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு இன்று வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசை பெவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த அஞ்சலி என்பர் தனது 8 வயது மகன் மோவின் பிரபுவை அழைத்துக் கொண்டு ரேஷன் கடைக்குச் சென்றார்.
அஞ்சலி வரிசையில் காத்திருந்த போது, விளையாட்டுத்தனமாக சிறுவன் ரேஷன் கடைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.
ரேஷன் கடைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சிறுவன் இழுத்து விளையாடியதாகவும் தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மூட்டை சரிந்து சிறுவன் மீது விழுந்தன.
இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள்நல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
-தேனி முருகேஸ்வரன்.